தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் மகன் சாரங்கன் மீது 08 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடாத்தி தப்பி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் உள்ள வீட்டிற்கு தடிகள் வாள் கண்ணாடி போத்தல்கள் இரும்புக் கம்பிகள் சகிதம் 04 மோட்டார் சைக்கிளில் வந்த 08 பேர் கொண்ட குமபல்கள் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
நடைபெற்ற அடிவடித்தன காட்சிகள் யாவும் சீசீரி கமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.