இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர் ‘கொமாண்டோ சலிந்தா‘வுக்கு ரி-56 ரகதுப்பாக்கி ரவைகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் இராணுவ லெப்டினன்ட்கேர்னல் ஒருவர் கடத்த வியாழக்கிழமை (செப். 11) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மல்லாவி பாலிசகர் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாககடமையாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர், இரண்டு தனித்தனி கொடுக்கல் வாங்கல்களில் 200 மற்றும் 60 எனமொத்தம் 260 ரி-56 துப்பாக்கி ரவைகளை சுமார் 650,000 ரூபாவிற்குவிற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த குறிப்பிட்ட இராணுவ அதிகாரி 2017 ஆம் ஆண்டு கொமாண்டோபடைப்பிரிவு மையத்தில் கடமையாற்றியிருந்ததாகவும், அந்த காலப்பகுதியில்தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் பாதாள உலகதலைவர்களில் ஒருவரான ‘கொமாண்டோ சலிந்தா’ அவரது கட்டளையின் கீழ்பணியாற்றியதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.