இன்றைய தினம் (ஜீலை 23) நெடுந்தீவுக்கு வருகை தந்த தீவக கல்விப்பணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு. பொன்னையா இரவிச்சந்திரன் அவர்கள் நெடுந்தீவு பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் அதிபர் ஆசிரியர்களை சந்தித்து தரம் 05 மற்றும் தரம் 11 மாணவர்களின் கல்வித்தரம் அதிகரிப்பு மற்றும் ஏனைய தரங்களினதும் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் இன்றைய காலகட்டத்தில் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடினார்
இச்சந்திப்பில் 60 மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன் பாடசாலைகளின் அதிபர்கள், கோட்டக்கல்விப்பணிப்பாளர், நெடுந்தீவு கனடா மக்கள் ஒன்றிய நெடுந்தீவின் அமைப்பின் தலைவரும், முன்னாள் வடகிழக்கு மாகாண ஆரம்ப உதவிக்கல்விப்பணிப்பாளரும் ஆகிய திரு.செ.மகேஸ் அவர்களும் கலந்து கொண்டார்.
விஷேடமாக நெடுந்தீவு மாணவர்களது கல்விக்கு அர்ப்பணித்து பணியாற்றுகின்ற உதவி புரிகின்ற அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன் தொடர்ந்து நெடுந்தீவின் கல்வி வளர்ச்சிக்கு தனது பங்களிப்பு கிடைக்கும் என்ற உறுதி மொழியினையும் வழங்கியுள்ளார்.