பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நுவரெலியா கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பஸ்விபத்தில்காயமடைந்தவர்களை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று கம்பளைவைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்

இதன் போது அங்கு சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலத்தினைவிசாரித்ததோடு வைத்தியசாலையில் வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும்வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார் இதேவேளை அமைச்சர் பிமல் ராமநாயக்கவும்சென்றிருந்தார்.

சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதிஹரினி அமரசூரிய இது போன்ற வாகன விபத்துக்களினால் ஒவ்வொரு வருடமும்உயிர்ழப்புகள் ஏற்படுகின்றமை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்பதுஎமக்கு தெரியும் இதனை தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பாரியமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

பின் தங்கிய பிரதேசமாக இருந்தாலும் வைத்திய சேவையினைவழங்குகின்றமை தொடர்பில் அவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும்இதேவேளை மீட்பு பிரிவினருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். முடியுமான அளவு மனிதாபிமானத்தோடு செயற்பாட்டு உதவிகளை வழங்கியநல்லுலங்களுக்கும் நன்றி.

நாட்டில் உள்ள நல்ல விபரங்களையும் பாதுகாக்க வேண்டும் எதேனும்பிரச்சினைகள் ஏற்படும் போது அனைத்தையும் விட்டு விட்டு அனைவரும் ஒன்றுசேர்கிறார்கள் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிறைவேற்ற கூடியஅனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதாக அவர் தெரிவித்தார்

Share this Article