பலாலி பாதுகாப்பு வலயத்தில் இடம் பெற்ற முக்கிய கலந்துரையாடல்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவதலைமையகத்தில்  கடந்த சனிக்கிழமை (நவ. 02) வடக்கு மாகாண கௌரவஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும்  யாழ்ப்பாண மாவட்டஇராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும்இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் பலாலி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாகவும், உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்ற வீதி, காணிகள் மற்றும்எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துஆலோசிக்கப்பட்டது.

அத்துடன் பொதுமக்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் உதவிகள் மற்றும்சேவைகள் தொடர்பான விடைகள் விரிவாக இராணுவ உயர் அதிகாரிகள்தெரிவித்தனர்.

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் இறுதியில்  ஆளுநர் அவர்களால்  மரக்கன்று நடுகை மேற்கொள்ளபட்டது.  பின்னர்விடுவிக்கப்பட்ட பலாலி – அச்சுவேலி பிரதான வீதியை வடமாகாண ஆளுநர்நேரில் சென்று பார்வையிட்டார்.

Share this Article