யாழ் வடமராட்சி வடக்குப் பருத்தித்துறைக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இளம் மீனவரொருவர் கடந்த வெள்ளிக்கிழமை (27/02) இரவு படகிலிருந்து தவறி விழுந்து காணாமல் போன நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.03) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை கொட்டடியைச் சேர்ந்த விஜயகுமார் நிக்சன் (வயது- 23) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.