இந்தியாவின் ஹசீரா துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்த MV X-Press Pearl கப்பலில் பரவிய தீயால் கப்பலில் இருந்த இரசாயன கொள்கலன்கள் சில கடலில் விழுந்தததால் இவை தற்போது நீர்கொழும்பு கடல் பகுதியில் கரைதட்டி வருகிறது.
கரையொதுங்கு பொருட்களை கையில் எடுக்க வேண்டாம் என சமுத்திர சுற்றாடல்
அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
கொள்கலனின் வெடிப்பு ஏற்படக்கூடியதிரவங்கள் காணப்படுகின்றமையினால், அது அபாயகரமானவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் இவ்வாறு ஏதேனும் திரவம் அவதானிக்கப்படும் பட்சத்தில் அது குறித்து இலங்கை கடற்படை அல்லது பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பாதுகாப்பு அதிகாரசபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறித்த கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை அடுத்து, கப்பலில் இருந்த 8 கொள்கலன்கள்கடலில் வீழ்ந்துள்ளன.
கொள்கலன்களில் எத்தனால், 25 தொன் நைட்ரிக் அசிட் உள்ளிட்ட இரசாயன பதார்த்தங்கள்1486 கொள்கலன்களில் இருந்துள்ளன.