பயணிகள் பஸ் சேவையில் விரைவில் அட்டைக் கட்டண முறை அறிமுகம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்துத் துறையில் விரைவில் அட்டை கட்டண முறை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

மக்களின் விருப்பம் மற்றும் அரசாங்கத்தின் நீண்டகால தொலைநோக்குக் கொள்கைகளின் அடிப்படையில், போக்குவரத்துத் துறையை முன்னேற்றும் நோக்கில் ஒவ்வொரு துணைத்துறையும் ஒழுங்குபடுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், பணம் தொடர்பான சட்டவிரோத பரிவர்த்தனைகள் மற்றும் ஊழல்களைத் தடுக்கும் விதமாக அட்டை கட்டண முறையின் அவசியம் மிகுந்ததாக அவர் வலியுறுத்தினார்.

இந்த கருத்துகளை அவர், ஏப்ரல் 30ஆம் திகதி தேசிய போக்குவரத்து ஆணையத்தின் புதிய தலைவர் பி.ஏ. சந்திரபால தன் பொறுப்புகளை ஏற்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே தெரிவித்தார்.

இதற்கிடையில், தற்போது பல்வேறு அமைப்புகளின் கீழ் செயல்படும் முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைகள் உட்பட உள்ளூர்ப் போக்குவரத்து சேவைகளை ஒரே கட்டமைப்புக்குள் கொண்டுவரும் புதிய திட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையத்தின் புதிய தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார்.

Share this Article