புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு சம்பந்தமாக சிவில் மற்றும் இதர தரப்புக்களுடன் கலந்துரையாடும் செயற்பாடுகளுக்காக அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் செயற்பாடுகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது அந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, அவர்களின் அபிப்பிராயங்கள் மற்றும் முன்மொழிவுகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டே வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்து வரும் ஆண்டின் முற்பகுதியில் சட்ட வரைவச் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அடுத்து வரவு, செலவுத்திட்டத்துக்கான விவாதங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் இந்த சட்ட வரைவச் சமர்ப்பிக்கும் செயற்பாடு தாமதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் பயங்கரவாததடைச் சட்டம் சம்பந்தமாக ஏற்கனவே பல தரப்பட்ட தரப்பினரும் கரிசனைகளை வெளியிட்டுள்ளமையின் காரணமாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்-என்றார்.