பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் யாழ் மாவட்டத்திற்காக 824 திட்டங்களுக்காக 322 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு !!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில்  அமைச்சரும்யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான   டக்ளஸ் தேவானந்தாஅவர்களின் தலைமையிலும் வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புகுழுவின் இணைத் தலைவருமான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின்இணைத்தலைமையிலும்  நேற்றையதினம் (மே30)  யாழ் மாவட்ட செயலககேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.

கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்  முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு,  மாவட்ட ஒருங்கிணைப்புகுழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள்தொடர்பாகவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டஆலோசனைகளும்  ஆராயப்பட்டதோடு பன்முகப்படுத்தப்பட்டவரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளும் ஆராயப்பட்டன.

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் யாழ் மாவட்டத்திற்காக 824 திட்டங்களுக்காக 322 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் அகழ்ந்த  சுண்ணாம்புக்கல்லை வெளியிடங்களுக்கு கொண்டுசெல்வதை தடுப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய  நடவடிக்கைகள்  ஆராயப்பட்டதோடு கீழ் பாலியாற்று குடிநீர் விநியோக திட்டத்தைநடைமுறைப்படுத்தல், சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல், கடல்கடந்த தீவுகளுக்கான அம்புலன்ஸ் சேவை, குறைந்த வருமானம் பெறும்குடும்பங்களுக்கான அரிசி விநியோக திட்டம், சட்டவிரோத மண் அகழ்வுகளைகட்டுப்படுத்தல், கருவேல மரங்களை அழித்தல் , தொடர்ச்சியாக இடம்பெறும்திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தல், பாடசாலை ஆரம்ப மற்றும் முடியும்  நேரங்களில் கனரக வாகனங்கள் வீதியில் செல்வதை கட்டுப்படுத்தல், யாழ்நகரத்தில் பொது மலசலகூடம் அமைத்தல் மற்றும் பொது போக்குவரத்துசேவைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதோடு, கடந்தசில தினங்களுக்கு முன்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றவன்முறை சம்பவம் குறித்தும் அவ்வாறான சம்பவம் இனிமேல் நடைபெறுவதைதடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பாகவும்கலந்துரையாடப்பட்டது.

இந் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட பதில் அரசாங்கஅதிபர் மருதலிங்கம் பிரதீபன்,  பிரதி பொலிஸ்மா அதிபர், மத்திய மற்றும்  மாகாண அமைச்சின்  திணைக்களத்தலைவர்கள், முப்படையினர், விசேட  அதிரடிப்படை வலய  அதிகாரி,  மாவட்ட செயலக பதவிநிலைஉத்தியோகத்தர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநல சேவை அமைப்புக்களின்பிரதிநிதிகள், கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், மற்றும் மாவட்ட செயலகஉத்தியோகத்தர்களும் என பலர் கலந்து கொண்டனர்.

Share this Article