பண்டாரவளையில் போக்குவரத்து சபை பேருந்து கடத்தல்!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சபை பேருந்தொன்று கடத்திச்செல்லப்பட்டு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (25/02) காலை அடையாளம் தெரியாத ஒருவரால் கடத்தப்பட்டு, தியதலாவ, வெலிஹெலகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட பேருந்து, மாத்தறைக்கும், பண்டாரவளைக்கும் இடையில் இயங்கும் வெல்லவாய டிப்போவிற்கு சொந்தமான பேருந்து ஆகும்.

இந்த விடயம் குறித்து பொலிஸாருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல்களின் போது, தியதலாவ, வெலிஹெலகம பகுதியில் வீதியோரத்தில் பேருந்து கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article