அரச வைத்திய அதிகாரிகளின் தாய்ச் சங்கத்துடன் யாழ் போதனாவைத்தியசாலைக் கிளைச் சங்கம் தற்போதைய நிலைமை பற்றிக்கலந்துரையாடிய பின்னர் , நேற்று(பெப். 28) காலை பொதுக்குழுக் கூட்டம்நடைபெற்றது. அதில் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக பின்வரும்முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
* யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ,வைத்தியசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட உள்ளக விசாரணைக் குழுவின் பரிந்துரையின்படி இப்பிரிவின் ( ATICU_ விபத்து அதிதீவிர கண்காணிப்புப் பிரிவு) சுமூக நிலை கருதி,பொறுப்புத் தாதிய உத்தியோகத்தராக நியமிக்க பட்டிருந்த தாதியை வேறுபிரிவிக்கு இதுவரை காலமும் மாற்றாமல், விபத்து அதிதீவிரகண்காணிப்பிரிவில்(ATICU) சிகிச்சை பெறுவதற்கான நோயாளிகளின் உரிமைகள்மறுக்கப்படுவதனை எமது சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
* பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு விபத்து அதிதீவிரக்கண்காணிப்புப் பிரிவு (ATICU) நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நல்லநிர்வாகத்துடன் கூடிய அதி தீவிர சிகிச்சைப் பிரிவினை நிறுவுவதற்காக எமதுதொழிற்சங்க நடவடிக்கையை விபத்து அதிதீவிர கண்காணிப்பு பிரிவிற்குமட்டும் மட்டுப்படுத்திக் குறைக்கிறோம்.
* இதன் காரணமாக ATICU இலிருந்து , சத்திர சிகிச்சை அதிதீவிர கண்காணிப்பு பிரிவு (SICU) க்கு நோயாளிகளை மாற்றும் போது SICUவில் கட்டில்கள்கிடைப்பதற்கு வசதியாக புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் குறிப்பிட்டவிபத்து அறுவை சிகிச்சைகள் தவிர ஏனைய வழக்கமான சத்திர சிகிச்சைகள்இடம்பெறாது.
* தற்போதைய பொறுப்புத்
தாதிய உத்தியோகத்தர் ATICU பணியில் இருக்கும் வரை ATICU வில் புதியநோயாளர்களின் அனுமதிகளை மருத்துவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள்.
* ATICU வில் உள்ள நோயாளிகள் மருத்துவ விடுதிகள் அல்லது SICU க்குமாற்றப்பட்டதும் ATICU இல் கடமையில் உள்ள வைத்தியர்கள் தொழிற்சங்கநடவடிக்கையாக அங்கிருந்து பணிப்பாளர் பணிமனைக்குஇடமாற்றப்படுவார்கள். எனவே அவர்களை வைத்தியசாலையில் உள்ள ஏனைய அதிதீவிர சிகிச்சை கண்காணிப்புப் பிரிவுகளுக்கு மாற்றுமாறு பணிப்பாளரிடம்கோரிக்கை வைக்கப்படும்.
* சிறந்த நிர்வாகத்துடன் கூடிய நோயாளிகளுக்குப் பாதுகாப்பான ATICUஐஉருவாக்குவதற்கு நாங்கள் துணை நிற்போம்.
* கிளினிக்குகள், வெளி நோயாளர் பிரிவு மற்றும் பிற சேவைகள் இன்று(நேற்றுபெப்.28) மாலை 4 மணி முதல் வழக்கம் போல் செயற்படும்.
* அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளின் பாதுகாப்பை முன்னுறுத்தி , கலந்துரையாடலின் போது பணிப்பாளரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டநடவடிக்கைகள் ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தத் தவறும் பட்சத்தில்முன்னறிவிப்பின்றி முழு அளவில் எமது தொழில் சங்க நடவடிக்கை மீண்டும்ஆரம்பிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
நன்றி.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்,
யாழ் போதனா வைத்தியசாலை கிளை