யாழ் மாவட்டத்தில் நேற்று மட்டும் 143 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வுகூடம் ஆகிய ஆய்வுகூடங்களில் 743 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் யாழ் போதனா வைத்தியசாலையில் 11 பேருக்கு தொற்று தொற்று உறுதியாகியுள்ளது.
நல்லூர்; சுகாதார வைத்திய அதிகாரி 127 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். திருநல்வேலி சந்ததையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களே இவர்கள்.
யாழ் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர் அடையாளம் காணப்பட்;டுள்ளனர். இதில் யாழ் மாநகரசபையின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நாவாந்தறை பிரதேசத்தினை சேர்ந்தவர்.
கைதடி பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார் இவர் திருநல்வேலி சந்தையுடன் தொடர்புடையவர்.