யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும்இணைந்து நடாத்திய மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வானது மேலதிகஅரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன் தலைமையில் நேற்றையதினம் (மார்ச்08) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .
தொழில் தேடுநர்கள் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான அரியசந்தர்ப்பமாக இருந்ததுடன் இந் நிகழ்வில் 45 ற்கும் மேற்பட்ட நிறுவனங்கள்கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் தனியார் உற்பத்தி நிறுவனங்கள், ஆடை உற்பத்தித் துறை, பாதுகாப்புச் சேவை, தாதியர் வேலைவாய்ப்பு, ஹோட்டல் துறை, கணக்கியல்துறை, காப்புறுதித் துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல்துறை போன்ற தொழில் வெற்றிடங்களிற்கான ஆட்சேர்ப்பதற்கான நிறுவனங்கள்மற்றும் கணினித்துறை, தாதியர் பயிற்சி நெறி, கப்பல் துறை ஹோட்டல்முகாமைத்துவம் போன்ற பாட நெறிகளை நடாத்தும் நிறுவனங்கள் மற்றும்சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் வங்கிக் கடன் வசதிகளை வழங்கும் நிதிநிறுவனங்கள் போன்றவை உள்ளடக்கிய வகையில் தொழிற் சந்தைநடைபெற்றது.
இதன்போது சுமார் 400 இற்கு மேற்பட்ட தொழில் நாடுவோர்கள் தமதுவிண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.