நேற்று மேலும் 528 பேருக்கு COVID-19 தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று மொத்தமாக 878 பேருக்கு Corona தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரேநாளில் கூடிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். முன்னர் ஒக்டோபர் 23ம் திகதி 866 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 21,857 ஆக உயர்ந்துள்ளது.