நெருங்கிப் பணியாற்ற ஆவலாக உள்ளேன் – அநுரவுக்கு இந்திய பிரதமர் வாழ்த்து !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமாரதிஸாநாயக்கவிற்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில்உள்ள அனைத்து நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளா்ச்சிக்கான சாகா்முன்னெடுப்பு ஆகியவற்றில் இலங்கைக்கு சிறப்பிடம் உள்ளது.

இந்நிலையில், இரு நாட்டு மக்கள் மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின்நலனுக்காக இந்தியா–இலங்கை இடையிலான பன்முக ஒத்துழைப்பை மேலும்வலுப்படுத்துவதற்கு அநுரகுமாரவுடன் நெருங்கிப் பணியாற்ற ஆவலாகஉள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளாா்

Share this Article