நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்றையதினம் (ஒக். 08) சிறப்பாக இடம்பெற்றது.
மாணவர்களும், பாடசாலை அபிவிருத்திக் குழுவும் இணைந்த ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் ஆசிரியர்கள் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு நிகழ்வு அரங்கிற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இதன்போது மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன், ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டு நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இதேவேளை ஆசிரியர்களிடையே விளையாட்டுகளும் நடாத்தப்பட்டு அவர்களை மாணவர்கள் மகிழ்வூட்டியிருந்தமை குறிப்பிடதக்கது.