நெடுந்தீவு மேற்கு பொன்விழா குழுவின், தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பும், ஆசிரியர்கள் கௌரவிப்பும் கடந்த திங்கட்கிழமை (ஒக்.06) நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 1975 இல் பிறந்து 2025 இல் 50 வயதினை பூர்த்தி செய்த பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து “நெடுந்தீவு மேற்கு பொன்விழா குழு” எனும் அமைப்பினை உருவாக்கி அதனூடாகவே குறித்த கௌரவிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை “பொன்விழா குழு” வினருக்கு குறித்த பாடசாலையில் கல்வி கற்பித்து ஓய்வு நிலையில் உள்ள ஆசிரியர்களையே இதன்போது கௌரவித்திருந்தனர்.
அத்துடன் இக் குழுவினரது ஏற்பாட்டில் நெடுந்தீவு மேற்கு பகுதியில் உள்ள தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு விசேட வகுப்புகள் நடாத்தி அதனூடாக சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.