நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் வட மாகாண தொழில் துறைத் திணைக்களத்தின் அனுசரணையில் கடந்த புதன்கிழமை (ஒக்29)காலை நெடுந்தீவு மேற்கு பிரதேச சபை நூலக கட்டிடத்தில் குழுத் தொழில்நுட்ப பயிற்சி நெறி இடம்பெற்றது

2025ம் ஆண்டு அபிவிருத்தியில் மாதிரிக் கிராமங்களுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் நெடுந்தீவு மேற்கு (J/01 ) கிராம அலுவலர் பிரிவில் ஜாம் மற்றும் சோஸ் (Jam, Tomato and Green Chilli Sauce Sauce ) தயாரிக்கும் பயிற்சித் திட்டமானது நடைபெற்றது
குறித்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்து பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது