நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தின் கிழக்குப் பகுதி பிரதேச சபையினரால் பொது வாகனத் தரிப்பிடமாக அடையாளப்படுத்தப்பட்டு இன்று (ஓகஸ்ட் 08) நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி மற்றும் தனியார் சுற்றுலா வாகனங்கள் என்பவற்றை தனியாக தரித்து விடைவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.
குறித்த பகுதி இயந்திர உதவியிடன் துப்பரவு செய்யப்பட்டு வாகனத் தரிப்பிடம் அமைப்பிற்கான வேலைத்திட்டத்தை நெடுந்தீவு பிரதேச சபையின் புதிய உறுப்பினர்களின் முயற்சி மற்றும் தீர்மானத்தின் அடிப்படையில் இந்நடைமுறை செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நடவடிக்கையின் மூலம் தீவின் நுழைவாயிலான மாவிலித் துறைமுகம் மெருகூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.