நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இருந்து இவ்வருடம் (2025 ) க.பொ. த. சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்களுக்கு கடந்தகால வினாத்தாள் தொகுப்புக்கள் அண்மையில் வழங்கப்பட்டது.
நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து நெடுந்தீவு 12 ஆம் வட்டாரத்தைச் சேரந்தவரும் புலம்பெயர் உறவுமான புஸ்பலதா ஜெயக்குமார் குடும்பத்தினர் சுமார் 50 மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
நெடுந்தீவில் கல்விகற்கும் மாணவர்களுக்கு பயனுடைய இச்செயற்பாட்டிற்கு பலரும் நன்றி பாராட்டியுள்ளதுடன், இந்நிகழ்வில் கலந்துகொண்டகோட்டக்கல்விப் பணிப்பாளரும் இக் குடும்பத்தினரின் செயற்பாட்டுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.