நெடுந்தீவு மகா வித்தியாலய ஆசிரியை திருமதி நிரஞ்சித் கமலவேணி அவர்களின் மணி விழாவும், சேவை நலன் பாராட்டும் இன்றையதினம் (ஒக். 24) சிறப்பாக இடம்பெற்றது.

நெடுந்தீவு மகா வித்தியாலய அதிபர் ஐ.தயாபரன் தலைமையில் வித்தியாலய உள்ளக அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் விழா நாயகியை அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்த்து விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் கோலாகலமாக இடம்பெற்றது.

பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கேக் வெட்டி கொண்டாடியதுடன் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்ட மை சிறப்பாகும்.
பாடசாலை சமூகத்தின் சார்பாக ஆசிரியர்கள், மாணவர்கள் என குழுக்களாக வாழ்த்து மடல் மற்றும் நினைவுப் பரிசில்களை வழங்கி கௌரவித்தனர்.

இதேவேளை விழா நாயகி ஆசிரியர் சேவையில் 27 வருடங்களை சிறப்பாக நிறைவேற்றியதுடன், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் 09 வருடங்கள் தமிழ் பாட ஆசிரியையாக சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.