நெடுந்தீவு மகளீர் சுயஉதவிக் குழுக்களின் சிறுவர் தினம் சிறப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் நெடுந்தீவு கிளையின் மகளீர் சுயஉதவிக்குழுக்களில் J/01, J/03, J/04 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளின் 10 குழுக்களின் கூட்டான நெடுங்கதிர் கொத்தணிமட்ட சங்கம் நடாத்திய சிறுவர்தின நிகழ்வுகள் கடந்த ஒக்.26 அன்று நெடுந்தீவு தேவா கலாசார மண்டபத்தில்  இடம்பெற்றது.

ஜெசாக் KNH – SHA –  திட்டத்தின் நெடுந்தீவு உதவி நிகழ்ச்சித்திட்டஉத்தியோத்தர் திருமதி ஜீ.மெலோஜனா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்பிரதம அதிதிகளாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் . பிரபாகரன் மற்றும்நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் . த்தியவரதன் ஆகியோர்கலந்துகொண்டனர்.

நிகழ்வின் கெளரவ விருந்தினர்களாக  அருட்பணி சோபன் ரூபஸ் அடிகளார்மற்றும் நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் முன் பிள்ளை பருவ அபிவிருத்திஉத்தியோகத்தர் திருமதி டா.நிஷாந்தினி அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சிறப்பு அதிதிகளாக ஜெசாக் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் திருமதி ஜூனிஸ் ஜென்சியா, ஊறுகாவற்றுறை பிரதேச செயலக பிரிவு சமூகஇலகு படுத்துனர் செல்வி தாரணி, காரைநகர் பிரதேச செயலக பிரிவு சமூகஇலக்குப்படுத்துனர் திருமதி மிதினா, நெடுந்தீவு பிரதேசசபை உப தவிசாளர்

ச.விமலதாஸ் மற்றும் அதிபர் நவரட்ண சிங்கம் அறக்கட்டளையின் ஸ்தாபகர்இரா. மருதநாயகம் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் மழலைச் செல்வங்களின் கலை நிகழ்வுகள் நிகழ்வைசிறப்பித்திருந்ததுடன் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டமை சிறப்பாகும்.

Share this Article