நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை பல தேவைகளுடன் சேவையில்..!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் பாவனைக்காக மின் இயந்திரம் ஒன்று சீரக இன்மையால் மருந்துகளை பாதுகாத்தல் மற்றும் திடீர் மின்வெட்டு நேரங்களில்  சிகிச்சை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருவதாக வைத்தியசாலை சமூகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று தற்ப்போது மருந்தாளர் நிரந்தரமாக நியமிக்கப்படாமையால் சிரமங்களை எதிர்கொள்வதுடன் நோயாளர்களது தேவைகளை பூர்த்தி செய்யமுடியாதுள்ளதுடன் வேறு பணியாளர்களின் ஊடாக இச்சேவையினை முன்னெடுக்கும் போது ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் பொறுப்புக்கூறலை வைத்தியரே தாங்கிக்கொள்ளும் நிலை ஏற்படவாய்ப்புள்ளதுடன் இதுவே உண்மையுமாகும்.

 

 

அத்துடன் தற்போது மருத்துவ மாதுவும் இல்லாத நிலை தொடர்வதுடன் விடுமுறை நேரங்களில் பதில் மருத்துவமாது ஒருவரை நியமிக்க முடியாத நிலையிலேயே நெடுந்தீவு வைத்தியசாலை பணி தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் நோயாளர்கள் பாதிப்படைவதுடன மேலதிக சிகிச்சை எனும் குறிப்புடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பும் நிலை தொடர்வதுடன் , நோயாளர்களும் பெரும் நிதிச் செலவுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது

இது தொடர்பான விடயங்களில் பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளர் உடனடி தீர்வினை தந்து நெடுந்தீவு மக்களின் மருத்துவ சேவையினை சீராக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

Share this Article
Leave a comment