நெடுந்தீவு பிரதேச செயலக உத்தியோகத்தர் நலம்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (29/12) ஒளிவிழா செயலக மண்டபத்தில் இடம்பெற்றது
நெடுந்தீவு பங்குத்தந்தை ப.பத்திநான் அடிகளாரால் ஒளிவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இவ் வழிபாட்டு நிகழ்வில் பிரதேச செயலாளர், பிரதேச சபையின் செயலாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்

இன்றைய ஒளிவிழா நிகழ்வு கலை நிகழ்வுகள் இடம்பொறாமல் இறை வழிபாடுகளுடன் நடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.