சமூக பாதுகாப்புச்சபைக்கு அதிகளவான பயனாளிகளை இணைத்தமைக்காக நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த கிராம அலுவலர் தம்பிராசா தனுசன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.
சமூக பாதுகாப்பிற்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வு இலங்கை சமூகபாதுகாப்பு சபையினால் நேற்றைய தினம் (ஒக். 16) திருகோணமலையில் நடைபெற்ற வேளையிலேயே இக்கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தனிப்பட்ட அடைவு மட்டங்களிற்கேற்ப பிரதேச செயலக பிரிவு ரீதியாக அதிகளவான பயனாளிகளை இணைத்தமைக்காக தேசியவிருதினை 29 கிராம மட்ட உத்தியோகத்தர்களான கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.