நெடுந்தீவு பிரதேசத்திற்கான மின் விநியோகம் கடந்த 03/02 தொடக்கம் சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்றையதினம் (09/02) 400Kv வலுவுடைய புதிய இயந்திரம் கடற்படைகலம் ஊடாக நெடுந்தீவுக்கு எடுத்துவரப்பட்டு , பிரதான மின் மார்க்கத்தடன் இணைக்கப்பட்டு நேற்று இரவு முதல் மின்விநியோகம் வழமைக்கு திரும்பியது.

பாவனையில் இருந்த 380Kv அதிக வலுவுடைய இரு மின்இயந்திரங்களும் கடந்த 02/02 முதல் பழுதடைந்தமையால் , குறைந்த 200Kv வலுவுடைய இரு மின் இயந்திரங்கள் மூலமாகவே மின் விநியோகம் சுழற்சிமுறையில் இடம்பெறறமை குறிப்பிடத்தக்கது.
