நெடுந்தீவு 15 கிலோ மீற்றர் தூரமான பிரதான வீதி விரைவில் காபெற் வீதியாக அமையவுள்ளதாக டக்ளஸ் தேவானந்த தெரிவிப்பு.
நாட்டில் மேற்கொள்ளப்படும் துரிதமான வீதி அபிவிருத்தியில் வடபகுதியில் குறிப்பாக யாழ் குடாநாட்டின் தரைவழியை விட்டு கடலால் சூழப்பட்ட நெடுந்தீவு பிரதேசத்தின் 15 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பிரதான வீதி மிக விரைவில் காபெற் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக டக்ளஸ் தேவானந்த தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (ஜூன் 07) யாழ்ப்பாணத்தில் கட்சியின் செயற்பாட்டாளர்கள் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே மேற்கொண்ட விடயத்தை தெரிவித்தர்.
தன்னிடம் மத்திய அரசால் கோரப்பட்ட 5 உள்ளக வீதி புனரமைப்பு திட்டத்தில் மேற்படி வீதியை புனரமைக்க தன்னால் முன்மொழிவு திட்டம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் நெடுந்தீவு பிரதேசமானது யாழ்ப்பாணத்துடன் தரைவழி பாதையை கொண்டிராத காரணத்தால் தரைவழி போக்குவரத்து இல்லைமையை கவனத்தில் கொண்டு தமது சாதனங்கள் கொண்டு செல்லும் சிரமத்தினை கருதி காலதாமதம் காட்டுவதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார் .