“நெடுந்தீவு பசுமை இயக்கம்” ஆரம்ப நிகழ்வு நாளையதினம் (நவம்பர் 01) நெடுந்தீவில் இடம்பெறவுள்ளது.

நெடுந்தீவு கிழக்கு முருகன் ஆலய முன்றலில் மு.ப.11.30 மணிக்கு நெடுந்தீவு பசுமை இயக்கத்தின் தலைவர் உ.மதுவண்ணன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலாளர் நடராசா பிரபாகரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக புங்குடுதீவு சூழலியல் மேம்பாட்டு அமைப்பின் செயலாளர் க. நாவலன், நெடுந்தீவு பிரதேச சபை முன்னாள் செயலாளர் சோ. தம்பிராசா, நெடுந்தீவு நவரட்ணசிங்கம் அறக்கட்டளை நிறுவுனர் இ.மருதநாயகம் ஆகியோரும், கௌரவ அதிதிகளாக நெடுந்தீவில் மத குருமாரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இதன்போது “நெடுந்தீவு பசுமை இயக்கம்” நிர்வாக சபையினர் அறிமுகம், மரக்கன்றுகள் வழங்கல், விருந்தினர்கள் உரை என்பன இடம்பெறவுள்ளது.