நெடுந்தீவு துறைமுகத்தில் படகு கட்டும் கயிறுகள் பாலத்திற்கு குறுக்காக பல அடுக்குகளின் கட்டப்பட்டிருப்பதால் படகில் ஏறவந்த ஒருவர் தடுக்கி கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இன்று (டிசம்பர் 10) காலை யாழ்நகர் செல்வதற்காக பொருட்களுடன் மாவிலி துறைமுகத்தில் படகேறச் சென்றபோது குறுக்காக கட்டப்பட்ட கயிறு தடக்கி கடலில் வீழ்ந்து காணாமல் போனநிலையில் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.
கடற்படையினர் மற்றும் ஊரவர்கள் இணைந்து மேற்கொண்ட நீண்டநேர தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்

இவ்வாறு உயிரிழந்தவர் நெடுந்தீவு 15 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த பரராசசிங்கம் பிறேமகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்
மீட்கப்பட்ட இவரது உடல் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.