நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்றையதினம் (ஒக்.07) சிறப்பாக இடம்பெற்றது.
உயர்தரமாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்களால் மாலைகள் அணிவிக்கப்பட்டு நிகழ்வு அரங்கிற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இதன்போது மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் , ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டு நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இதேவேளை 2025 இல் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வித்தியாலய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் வகுப்பாசிரியரும் கௌரவிக்கப்பட்டார்.