நெடுந்தீவு சென் அன்ரனிஸ் சனசமூக நிலையத்தினரால் நெடுந்தீவு கோட்டப் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட ஆக்கத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (26/12) நிலைய மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

நெடுந்தீவு சென் அன்ரனிஸ் சனசமூக நிலைய தலைவர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நெடுந்தீவு பிரதேசசபை உபதவிசாளர் , உறுப்பினர்கள் மற்றும் புதிய வாழ்வு நிறுவன பிரதிநிதிகள் , நிலைய நிர்வாகத்தினர், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

ஆக்கத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களினை புதிய வாழ்வு நிறுவனத்தினர் வழங்கியிருந்ததுடன் போட்டி நிகழ்வுகள் யாவும் கடந்த 2025 ஓகஸ்ட் 24 அன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாணவர்களுக்கான பரிசில்களினை புதிய வாழ்வு நிறுவனத்தினர் வழங்கி வைத்தமைக்கும், நிகழ்வில் கலந்து சிறப்பித்த மாணவர்கள் மற்றும் விருந்தினர்களுக்கும் நிலைய நிர்வாகத்தினர் நன்றி பாராட்டியுள்ளமை சிறப்பாகும்.