நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ. த. க. வித்தியாலயத்தின் விஜயதசமி விழா நிகழ்வுகள் கடந்த வியாழக்கிழமை (ஒக். 02) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
வித்தியாலய அதிபர் சி.சிவகுமார் அவர்களின் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு விஜயதசமி விழா இடம்பெற்றது.
வழிபாடுகளை தொடர்ந்து மாணவர்களது நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பிரசாதமும் பிள்ளைகளிடையே பரிமாறப்பட்டு பக்திபூர்வமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.