நெடுந்தீவினை தூய்மையாக வைத்திருப்போம் எனும் தொனிப்பொருளுக்கிணங்க நெடுந்தீவு மின்சார நிலையத்தின் பின்பகுதி அண்மையில் பாரிய இயந்திர துணையுடன் துப்பரவு செய்யப்பட்டது.
நீண்ட காலமாக அப்பகுயில் குப்பைகள் கொண்டப்பட்டு வந்ததைடன் , மழை காலங்களில் நீர தேங்கி நின்று தொற்று நோய்களை உண்டுபண்ணும் வகையில் இருந்த பகுதியே இவ்வாறு துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மாவிலித் துறைமுகத்தின் கிழக்குப் பகுதி இயந்திர உதவியிடன் துப்பரவு செய்யப்பட்டு வாகனத் தரிப்பிடம் அமைப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.