நெடுந்தீவு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா இடமான குயின்ரவர் பகுதிக்கு செல்வதற்கான வீதியின் இருமருங்கும் இருந்த மரங்கள் பற்றைகள் நெடுந்தீவு ATP ரவல்ஸ் நிறுவனத்தால் வெட்டி துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
நெடுந்தீவுக்கு வருகின்ற சுற்றுலாவிகள் குறித்த பகுதிக்கு பேருந்துகளில் செல்லமுடியாத நிலையில் மரஞ்செடிகள் காணப்பட்டமையால் அவற்றினை நல்லெண்ண முயற்சியாக வெட்டி அகற்றி பாதையினை சீரமைத்த செயற்பாடானது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதன்காரணமாக நெடுந்தீவுக்கு வருகின்ற சுற்றுலாவிகள் பெரிய பேரூந்துகளில் குறித்த குயின்ரவர் பகுதியினைப் சென்று பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.