நெடுந்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாச கட்டிட திறப்பு விழா இன்றைய தினம் (15/12) இடம்பெற்றது.
இந்நிகழ்விலும் பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டு கட்டிடத்தினை நடாவெட்டி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலாளர், நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர், உப தவிசாளர், நெடுந்தீவு பொலிஸ் அதிகாரி , பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் சமாச உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.