நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வின் இறுதி உதைபந்தாட்டப் போட்டியாக சென் ஜோண்ஸ் இளைஞர் கழகம் எதிர் சென் ஜேம்ஸ் இளைஞர் கழகம் என்பன மோதிக்கொண்டன. இதன்போது 2:0 எனும் கோல் கணக்கில் சென் ஜோண்ஸ் இளைஞர் கழகம் வெற்றியீட்டியது.
இதேவேளை சென் ஜேம்ஸ் இளைஞர் கழகம் எதிர் விங்ஸ் இளைஞர் கழகம் கயிறு இழுத்தல் ஆண்கள் இறுதி நிகழ்வில் போட்டியிட்டு சென் ஜேம்ஸ் இளைஞர் கழகம் சம்பியனாகியது.
இறுதி நிகழ்வுக்கு முன்னதாக இளைஞர் கழகங்களுக்கு இடையே இடம்பெற்ற குழுப் போட்டிகளில் சாதனை படைத்து சம்பியனான கழகங்கள்
ஆண்களுக்கான போட்டிகள்
- கரப்பந்து – ஸ்ரார் இளைஞர் கழகம்
- எல்லே. – விங்ஸ் இளைஞர் கழகம்
- கிரிக்கெட் – விங்ஸ் இளைஞர் கழகம்
- கபடி – சென் ஜோன்ஸ் இளைஞர் கழகம்
பெண்களுக்கான போட்டிகள்
- கிரிக்கெட் – சென் ஜேம்ஸ் பெண்கள் அணி
- உதைபந்து, – சென் ஜேம்ஸ் இளைஞர் கழகம்
- எல்லே – சென் ஜேம்ஸ் இளைஞர் கழகம்
- கயிறு இழுத்தல் – சென் ஜேம்ஸ் இளைஞர் கழகம்
- கரப்பந்து – சென்ஜோண்ஸ் இளைஞர் கழகம்
- கபடி – சென்ஜோண்ஸ் இளைஞர் கழகம்
- வலைப்பந்து – விங்ஸ் இளைஞர் கழகம்
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வு நேற்று (ஒக்.17) சிறப்பாக இடம்பெற்றது. நெடுந்தீவு பிரதேச இளைஞர் சம்மேளன தலைவர் அ.புஸ்பகுமார் தலைமையில் நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலாளர் நடராஜா பிரபாகரன் அவர்களும் , சிறப்பு விருந்தினராக நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் அவர்களும் மற்றும் விருந்தினர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.