நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தரின்ஏற்பாட்டில், இலங்கை பெண்கள் பணியகத்தின் அனுசரனையுடன் வருமானவழிகாட்டல் பயிற்சிநெறி இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றையதினம் (ஒக். 28) முதலாம் நாள் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது நெடுடுந்தீவு பிரதேசத்திற்குட்பட்ட சிறுதொழில் செய்யும் பெண் முயற்சியாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இந்நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலக சிறுதொழில் அபிவிருத்திஉத்தியோகத்தர் ரா.பிரசாத் வளவாளராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.