நெடுந்தீவில் பாதிப்பிற்கு உள்ளான மக்களுக்கான உதவிப் பொருள் வழங்கல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் அனர்த்தத்தை ஏற்படுத்திய டித்வா புயலினால் பாதிப்பிற்கு உள்ளான மக்களுக்கான உதவிப் பொருட்களை வழங்கும் நிகழ்வு  நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இன்று (09/12) இடம்பெற்றது.

பாதிப்பிற்கு உள்ளான அனைத்து மக்களுக்கும் உதவிப்பொருட்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் பிரதேச செயலகத்தால் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டுவரும் உதவித்திட்டத்தில் தேர்வுசெய்யப்பட்ட பயளாளிகளுக்கான பொருட்களே இன்று வழங்கி வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் , பிரதேச செயலர் ந.பிரபாகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு பாதிப்புற்ற மக்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கிவைத்தனர்

தொடர்ந்துவரும் நாட்களிலும் பாதிப்புற்றோருக்கான உதவிப்பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பிரதேச செயலக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Article