புயல் மற்றும் வெள்ளத்தினால் நெடுந்தீவில் பாதிக்கப்பட்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட 250 குடுப்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் நேற்று (டிசம்பர் 05) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது
டெல்ப்ற் சமுத்திரா நிறுவனம் ஊடாக அதன் ஸ்தாபகர் நெடுந்தீவை சேர்ந்த டாக்டர் கந்தப்பு மருது குடும்பத்தினரால் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினரால் தெரிவு செயயப்பட்ட பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்
இந்நிகழ்வில் நெடுந்தீவு வசப கடற்படை முகாம் அதிகாரிகள் , பிரதேச செயலகத்தினர், டெல்ப்ற் சமுத்திரா நிறுவனத்தினர் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டிருந்தனர்