நெடுந்தீவிலுள்ள கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையில் வைத்து, மாகாணகுறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதிமூலம் கோழி வளர்ப்புக்காக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சு வழங்கும் நிகழ்வில் நேற்றையதினம் (மார்ச்05) ஆளுநர் கலந்துகொண்டு வழங்கிவைத்தார்.
இதேவேளை வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சால் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது இந்நிகழ்விலும் ஆளுநர் பங்கேற்று பொருட்களை வழங்கிவைத்தார்.
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் குறைகேள் சந்திப்பில் பங்குகொள்வதற்காக நெடுந்தீவுக்கான விஜயத்தை நேற்றையதினம் (மார்ச்05) வடமாகாண ஆளுநர் மேற்கொண்டிருந்த போதே இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.