நெடுந்தீவில் சிறப்பாக இடம்பெற்ற தவக்கால கூட்டுத்திருப்பலி ஒப்புகொடுக்கம் நிகழ்வு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிறிஸ்தவ மக்கள் தமது பெரிய வெள்ளியின் தவக்கால கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கும் நிகழ்வு நேற்றுமுனதினம் (15 ஏப்ரல்) நெடுந்தீவில் உள்ள தேவாலயங்களில் சிறப்பாக இடம்பெற்றது. 

பெரிய வெள்ளி தினமான நேற்றுமுனதினம் கூட்டுத் திருப்பலி நெடுந்தீவு தூய யுவானியார் ஆலயத்தலும், நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலயத்திலும் மிகச் சிறப்பாக தவக்கால சிலுவைப் பாதையின் கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.

கூட்டுத் திருப்பலியினை பங்கு முதல்வர் மயூரன் அடிகளார்  தலைமையில் நடத்தி வைத்தனர்.

குறித்த திருப்பலி நிகழ்வில், நெடுந்தீவு பலபாகங்களிலிருந்தும் வருகைதந்த பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். 

தவக்கால வாரம் கடந்த மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகி, உயிர்த்தஞாயிறு தினமான இன்று  (17 ஏப்ரல்) கூட்டுத்திருப்பலியுடன் இனிதே நிறைவடையவுள்ளது.

 

Share this Article