நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள சுற்றுலா மற்றும் பயணிகள் சார்பான தொழில்களில் ஈடுபடும் சங்கத்தின் உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் நாளையதினம் (ஒக். 15) புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
நெடுந்தீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் நாளையதினம் நெடுந்தீவு தேவா கலாச்சார மண்டபத்தில் முற்பகல் 11.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக குறித்த சங்கங்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் நெடுந்தீவில் உள்ள சுற்றுலா வாகன உரிமையாளர் சங்கம் , முச்சக்கரவண்டி சங்கம், பயணிகள் படகு உரிமையாளர் சங்கம், வர்த்தக சங்கம் என்பவற்றின் உறுப்பினர்களுக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுற்றுலா வாகன கட்டணம், படகு கட்டணம் , படகு சேவை அட்டவணை மன்றும் நயினாதீவு படகுககள் நெடுந்தீவுக்கு வருதல் தொடர்பான தீர்மானம் மற்றும் பொதுமக்கள் , சுற்றுலாவிகள் நலன்சார் விடயங்கள் ஆராயப்படவுள்தாக தெரியவருகின்றது.
நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் , பொது சுகாதார பரிசோதகர், கடற்படை , பொலிஸ் அதிகாரிகள் என பலர் கந்துகொள்ளவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.