குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் நெடுந்தாரகை படகு இன்று (15/12) காலை , வந்த வேளை அதில் ஏறுவதற்கு பலரும் முயன்ற வேளை அந்த படகில் 100 பேரை மாத்திரமே ஏற்ற முடியும் என கடற்படையினர் திடமாக கூறி விட்டனர். அதனால் ஏனையோர் நெடுந்தீவு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது.

அதனை அடுத்து இன்று நெடுந்தீவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் , நெடுந்தீவு பிரதே செயலர் , யாழ்.மாவட்ட செயலர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய வேளை நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும் , குமுதினி படகு பழுதடைந்துள்ளமையால் , சேவையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
பின்னர் , நெடுந்தீவில் இருந்து வடதாரகை படகு ஏற்பாடு செய்யப்பட்டு குறிகாட்டுவானில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் , நெடுந்தீவு பிரதே செயலர் மற்றும் அனைவரையும் நெடுந்தீவு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது
நெடுந்தீவில் வேலை செய்யும் பலரும் திங்கட்கிழமை நெடுந்தீவு நோக்கி செல்வதால் , திங்கட்கிழமை காலையில் அதிகளவானோர் வருகை தருவார்கள். இந்நிலையில் நிவாரண பணிகளுக்காக மேலும் பலரும் வருகை தருவார்கள் எனவும் தெரிந்த நிலையில் பயண ஒழுங்குகளை உரிய முறையில் செய்யாது, இருந்த அரச உயர் அதிகாரிகளை பலரும் கடிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது
நெடுந்தீவில் இருந்து வடதாரகை வரவழைத்து குறிகாட்டுவானில் இருந்தோர் நெடுந்தீவுக்கு சென்ற ஏற்பாடு இன்று மட்டுமா …? தொடருமா…?