நெடுந்தீவு சென் அன்ரனிஸ் நிலாஜோதி முத்தமிழ் நாடக மன்றத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான விழிப்புனர்வு கருத்தமர்வு இன்று (ஓகஸ்ட் 08) இடம்பெற்றது.
நெடுந்தீவு மகாவித்தியாலய மண்டபத்தில் “புதிய சமூகம் உருவாக்குவோம்” எனும் கருப்பொருளில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று நிறைவடைந்துள்ளது.
கருத்தமர்வினை நெடுந்தீவு மண்ணின் மைந்தன் அருட்பணி றொபேட் ஜேக்கப்CMF அவர்கள் கலந்துகொண்டு வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது இளைஞர் யுவதிகளும் இக்கருத்தமர்வில் பங்கு கொண்டுபயன்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.