நெடுந்தீவில் இடம்பெற்ற JASAK யாழ் சமூக செயற்பாட்டு மைய குழுக்கள்சிறுவர் தின நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

JASAK யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் நெடுந்தீவு கிளையின் J/02, J/05, J/06 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளின் 09 குழுக்கள் இணைந்து நடாத்திய சிறுவர் தின நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை (ஒக். 25) நெடுந்தீவு தேவா கலாசார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

ஜெசாக் KNH – SHA –  திட்டத்தின் நெடுந்தீவு உதவி நிகழ்ச்சித்திட்ட உத்தியோத்தர் திருமதி ஜீ.மெலோஜனா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜெசாக் உதவி நிகழ்ச்சித்திட்ட உத்தியோத்தர் றொணிபஸ் அவர்கள் பிரதமஅதிதியாக கலந்துகொண்டார்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினராக அருட்பணி சோபன் ரூபஸ் அடிகளாரும்கௌரவ விருந்தினராக நெடுந்தீவு சைவபிரகாச வித்தியாலய ஆசிரியை திருமதி நடராஜலிங்கம் கலைவாணி அவர்களும் கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக ஊர்காவற்றுறை சமூக இலகுபடுத்துனர் செல்வன் தர்ஷன், கிராம சேவையாளர் திருமதி தயாளினி, முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நிஷாந்தினி மற்றும் நெடுந்தீவு பொலிஸ்  பொறுப்பதிகாரி  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் மழலைச் செல்வங்களின் கலை நிகழ்வுகள் நிகழ்வைசிறப்பித்திருந்ததுடன் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

Share this Article