நெடுந்தீவிலிருந்து 44 புறாக்களுடன் சென்ற இருவர் குறிகாட்டுவானில் கைது!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

 

நெடுந்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கடத்தப்பட்ட 44 புறாக்களுடன் இருவர் குறிகாட்டுவான் துறைமுகத்தில் வைத்து இன்று (13/02) மதியம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Screenshot

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்..

இன்று பகல் 11.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்ட தனியார் பயணிகள் படகில் பயணித்த நெடுந்தீவு மற்றும் வெளியூரைச் சேர்ந்த இருவரே இவ்வாறு 03 காட்போட் பெட்டிகளில் அடைக்கப்பட்ட 44 புறாக்களுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களும் , கைப்பற்றப்பட்ட புறாக்களும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவருகின்றது.

Share this Article
Leave a comment