நெடுந்தீவில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் உற்பத்திக்கானவேலைத்திட்டத்தினை துறைசார் மற்றும் இந்திய தூதர அதிகாரிகள் குழு இன்றையதினம் (ஒக். 06) நேரடியாக பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
இன்றையதினம் காலை கடற்படை படகு மூலம் நெடுந்தீவுக்கு வருகை தந்த இந்திய துணைத்தூதரக யாழ் அதிகாரி, நெடுந்தீவில் முன்னெடுக்கப்படும் இந்திய சோலார் திட்ட நிறுவன அதிகாரி, இலங்கை மின்சாரசபை மற்றும் ரெலிகொம் அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆகியோர் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்ற பிரதேசத்திற்கு சென்று வேலைகளின் முன்னேற்றம் தொடர்பிலும், தொடர் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இத்திட்டத்தினை ஒப்பந்த அடிப்படையியில் செயற்படுத்திவருகின்ற நெடுந்தீவு பல.நோ.கூ. சங்கத்தின் தலைவர் எ.அருந்தவசீலன் மற்றும் துறைசார் பணியாளரகளும் பிரசன்னமாகியிருந்தனர்.
இலங்கை – இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இந்தபாரிய மின்சார திட்டமானது முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.