நுவரெலியாவில் பேருந்து விபத்து – 23 பேர் காயம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லபுக்கலை டொப்பாஸ் பகுதியில்பதுளையிலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கி பயணித்ததனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து நேற்று (மே 23) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 23 பயணிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்டவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 18 பெண்களும் 3 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகிகுடை சாய்ந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article