நீர் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நீர் கட்டண திருத்தம் குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைநேற்றையதினம் (ஆகஸ்ட்26) அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திஅமைச்சர் ஜீவன் தொண்டமானினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைபத்திரத்தின் பிரகாரம் ஒகஸ்ட் 21 ஆம் திகதியிலிருந்து நீர் கட்டணத்தைத்திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதன்படி, உள்நாட்டு சமுர்த்தி பெறுபவர்கள் மற்றும் வீட்டு பாவனையாளர்களுக்கு7 சதவீதமாகவும், அரச வைத்தியசாலைகளுக்கு 4.5 சதவீதமாகவும், பாடசாலைமற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு 6.3 சதவீதமாகவும் நீர் கட்டணத்தை  குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Share this Article